உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலத்தில் ரூ.2 கோடியில் பக்தர்களுக்கு வசதி: திட்டம் தயார்!

தாயமங்கலத்தில் ரூ.2 கோடியில் பக்தர்களுக்கு வசதி: திட்டம் தயார்!

இளையான்குடி : தாயமங்கலம் கோயிலில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ. 2 கோடியில் பக்தர்களுக்கு வசதிகள் செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தினமும் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இங்கு போதிய வசதிகள் இல்லை. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சுற்றுலாத்துறை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு திட்ட மதிப்பீடு கோரியுள்ளது.அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் சுவாமிநாதன் ஆலோசனையின் படி அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், இளையான்குடி பி.டி.ஓ.,குமரேசன், ஊராட்சி தலைவர் லெட்சுமி ஆகியோர் கோயிலில் செய்ய வேண்டிய பணிகள்,இடங்களை தேர்வு செய்தனர்.அறநிலையத்துறை மூலம் சுமார் ஓரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் , மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் கருத்துரு,திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !