உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்கா பரமேஸ்வரி கோவிலில் காணிக்கை சேலைகள் ஏலம்!

துர்கா பரமேஸ்வரி கோவிலில் காணிக்கை சேலைகள் ஏலம்!

பெங்களூரு: பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமான கொல்லுாருவின் கட்டீலில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சேலைகளை ஏலம் விட்டதில், கோவிலுக்கு, 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருமணம், வேலை, தொழிலில் வெற்றி, விவசாயம் போன்ற நிறைவேறிய வேண்டுதல்களுக்கு ஈடாக, பக்தர்கள், இங்கு வந்து சேலைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு அளிக்கப்படும் சேலைகள், கோவிலின் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள சேலைகளை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை, கோவில் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த, கோவில் நிர்வாகம் தீர்மானித்தது.இதன்படி, 2014 மே முதல் சேலைகளை ஏலம் விடுவது துவங்கப்பட்டது. நடப்பாண்டு செப்டம்பர் இறுதி வரை, 20,283 சேலைகள் ஏலம் விடப்பட்டு, 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருவிழாவின் போதும், நவராத்திரி சந்தர்ப்பத்திலும் தினமும் சேலைகள் ஏலம் விடப்படுகிறது. கடந்த, 2014ல் நவராத்திரி லலிதா பஞ்சமி தினத்தன்று, 14 ஆயிரம் சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் கலைஞர்களுக்கு, சேலைகள் கொடுப்பது இக்கோவிலின் வழக்கமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !