உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூர திருநாள் விழா கொடியேற்றம் நெல்லையப்பர் கோயிலில் கோலாகலம்

ஆடிப்பூர திருநாள் விழா கொடியேற்றம் நெல்லையப்பர் கோயிலில் கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருநாள் கொடியேற்ற திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.காந்திமதியம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருநாள் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கும்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.4ம் திருநாளில் நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதிஅம்பாள் சன்னதியில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடக்கிறது.ஆடிப்பூரம் 10ம் திருநாள் இரவு ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது.அன்று காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கசன் காத்த பெருமாள், தக்கார் பொன்.சுவாமிநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !