திருஅருட்பிரகாச வள்ளலார் குரு குலத்தில் பூஜை விழா
பாகூர்: சேலியமேடு திரு அருட்பிரகாச வள்ளலார் குருகுலத்தில், குமாரவேலு சுவாமிகளின், இரண்டாம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். கணேசன் தலைமையில், அருட்பெருஞ்ஜோதி அகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் ராமலிங்கம் ’சுத்த சன்மார்க்க கொடியேற்றினார்’. புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட முன்னாள் மாணவர் சிவராமன், தன் இசைக் குழுவினருடன் இணைந்து இசையமைத்து பாடிய, ’தாயுமானவர் சுவாமிகளின் பாடல்கள் அடங்கிய சி.டியை சர்குரு துறையூர் ஜெயராம சுவாமிகள் வெளியிட, மழையூர் சதாசிவம் பெற்றுக் கொண்டார். குமாரவேலு சுவாமிகளின் இரண்டாமாண்டு குருபூஜை விழா மலரை, புலவர் சினு ராமச்சந்திரன் வெளியிட, பாரதிதாசன் கல்லுாரி பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, இசை பேரரசு மழையூர் சதாசிவத்தின், திரு அருட்பா அருள் இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ௬ம் தேதி மாலை 6.30 மணிக்கு, சிவராமன் குழுவினரின் திருஅருப்பா தமிழிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை திருஅருட்பிரகாச வள்ளலார் குருகுல நிர்வாகிகள் மற்றும் சீடர்கள் செய்திருந்தனர்.