திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்!
ADDED :3652 days ago
திருவள்ளூர்: ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் நேற்று திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, உற்சவருக்கு திருமஞ்சனம், காலை, 9:30 மணி முதல் நடந்தது. பின், மாலை, 5:30 மணிக்கு, உற்சவர் மாட வீதிகளில் உலா வந்தார்.சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை, 5:30 மணிக்கு நடந்தது. பூங்காநகர், சிவ - விஷ்ணு கோவில், ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கும், சாய்பாபா சன்னிதியில், காலை, 9:00 மணிக்கும் திருமஞ்சன அபிஷேகம் நடந்தது., அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த, பெருமுடிவாக்கம் கோதண்ட ராமர் கோவில் ஆகியவற்றிலும், உற்சவருக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.