திருப்பாலைவனத்தில் நாளை சனி பிரதோஷம்
ADDED :3652 days ago
பொன்னேரி: திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவிலில், நாளை, சனி பிரதோஷம் நடைபெறுகிறது.பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனத்தில், லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பிரதோஷ வரலாறு தோன்றிய ஸ்தலமாக திருப்பாலீஸ்வரர் கோவில் உள்ளது. சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நாளை (10ம்தேதி), இக்கோயிலில், சனி பிரதோஷ விழா, சிறப்பு பூஜைகளுடன் நடைபெற உள்ளது.