உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமப்புற கோவில்களுக்கு பொருட்கள் வழங்கும் விழா

கிராமப்புற கோவில்களுக்கு பொருட்கள் வழங்கும் விழா

திண்டிவனம்: இந்து அறநிலையத்துறை சார்பில், கிராமப் புறங்களிலுள்ள கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. திண்டிவனம் மற்றும் வானூர் வட்டத்திலுள்ள 63 சிறிய கோவில்களுக்கு, இந்து அறநிலையத்துறை சார்பில் பூஜைப் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., அரிதாஸ் தலைமை தாங்கி, பூஜை பொருட்களை, கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கினார். திண்டிவனம் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், ஒலக்கூர் ஒன்றிய செயலா ளர் ராஜேந்திரன், நகர் மன்ற கவுன்சிலர் சுதாகர், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வராஜ், செயல்அலுவலர்கள் ஜெயக்குமார், பாலசுப்ரமணியராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !