எட்டயபுரம் அம்மன் கோயிலில் வரும் 2ம் தேதி ஆடிப்பூர விழா
ADDED :5224 days ago
எட்டயபுரம் : எட்டயபுரம் நடுவிற்பட்டி தேவி வண்டிமலைச்சியம்மன் கோயிலில் வரும் 2ம் தேதி ஆடிப்பூரம் வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.எட்டயபுரம் நடுவிற்பட்டி பெரியதெரு செங்குந்தர் நண்பர்கள் குழு கூட்டம் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் பழனிகுமார் வரவேற்றார். எட்டயபுரம் நடுவிற்பட்டி பெரிய தெருவில் பிரசித்தி பெற்றதும் பழமையான சக்திவாய்ந்த தேவி வண்டி மலைச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிப்பூரம் அம்மனுக்கு வளைகாப்பு விழா சிறப்பு பூஜைகள் செய்து வரும் 2ம் தேதி நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க முடிவு செய்துள்ளனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.