தொண்டர்கள் நாயினார் கோயில்!
ADDED :4049 days ago
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகில் அமைந்துள்ளது. தொண்டர்கள் நாயினார் கோயில் திருஞானசம்பந்தர், அகத்திய முனிவர் மற்றும் சிவனடியார்களின் வேண்டு கோளுக்கிணங்கி, சிவபெருமான் கோயில் கொண்ட இடம் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள இறைவனுக்கு இந்தப் பெயர் வந்தது. சிவன் சன்னிதிக்கு முன்புறத்தில் திருஞானசம்பந்தர், அகத்தியர் இருவரும். இருக்கின்றனர். இங்குள்ள பிராகாரத்தில் தெற்கு நோக்கி சனீஸ்வர பகவான் தனியாக அருள்கிறார். இவரது வலக்கையில் கிளி காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.