உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடவாசல் தீபாராதனை!

குடவாசல் தீபாராதனை!

நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் ஆதிவராகப் பெருமான் கோயிலில் புரட்டாசி மாதம் கருடசேவை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு அரிசி மாவும் தயிரும் கலந்து மாக்காப்பு சாத்தப்படுகறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடன் மீது சுவாமியை எழுந்தருளச்செய்து முன் கதவுக்குப் பின்னால் வந்து நிறுத்திக்கொள்வர். பெரிய கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். தீபாராதனை காட்டும் போது கதவுகள் திறக்கப்பட்டு ஜகஜோதியாக லட்சுமிபதி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதற்கு குடவாசல் தீபாராதனை என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !