உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அன்னதானம்!

பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அன்னதானம்!

புதுச்சேரி: புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தலைவாழை இலை போட்டு, இன்று அன்னதானம்  வழங்கப்படுகிறது. புதுச்சேரி – திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில்,  36 அடி    உயர, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும்   பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான இன்று (10ம் தேதி) பகல்   12:00 மணி   முதல் 1.30 மணி வரை, ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை போட்டு உணவு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சாரிட்டபிள் டிரஸ்ட் செய்துள்ளது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !