உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தவன விநாயகருக்கு மண்டலாபிஷேக விழா

நந்தவன விநாயகருக்கு மண்டலாபிஷேக விழா

சின்னசேலம்: சின்னசேலம் ஆர்ய வைஸ்ய நந்தவன சித்தி செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி முலவருக்கு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் 9:30 மணிக்கு செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு அரசு வேம்பு திருக்கல்யாணம், சகஸ்ர நாம அர்ச்சனை, ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்ய வைஸ்ய தலைவர் விட்டேல், நிர்வாக தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !