புதுச்சேரியில் இருந்து வில்லியனுாருக்கு பாதயாத்திரை இன்று துவக்கம்
வில்லியனுார்: புதுச்சேரியில் இருந்து வில்லியனுாருக்கு பரிகார பாதயாத்திரை இன்று துவங்குகிறது. வில்லியனுார் மாதா ஆலய பங்கு தந்தை ரிச்சர்ட் விடுத்துள்ள அறிக்கை: கடந்த 1977 ஆண்டு அக்டோர் மாதம் புயல் தாக்க இருந்தது. அப்போது, வில்லியனுார் மாதாவிடம் வேண்டியதன் பேரில் புயல் தாக்க வில்லையாம். அதன்பின், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று இயற்கை சீற்றங்களிலிருந்து காக்க வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு அக்., மாதம் 10ம் தேதி பாதயாத்திரை நடந்து வருகிறது. அதேபோல் இன்று பிற்பகல் 2:௦௦ மணியளவில் துாய ஜென்ம ராக்கினி மாதா ஆலயத்தில் இருந்து தேர்பவனியுடன் பாத யாத்திரை துவங்குகிறது. பேராலய பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் அடிகளார் முன்னிலையில் மறை மாவட்ட முதன்மை குரு அருளாளந்தம் அடிகளார் துவக்கி வைக்கிறார். மாலை 5:30 மணிக்கு வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தில் துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு பரிகார திருப்பலி நடக்கிறது.