சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்!
ADDED :4015 days ago
செஞ்சி: சிங்கரவம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டுநேற்று திருப்பாவாடை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு உற்சவர் ரங்கநாதர், தாயார் அம்மாளுக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். விழா ஏற்பாடுகளை குமார் பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.