உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் பக்தர்கள் அவதி! இரவு நேர பஸ்கள் நிறுத்தம்

ராமேஸ்வரம் கோயில் பக்தர்கள் அவதி! இரவு நேர பஸ்கள் நிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இரவில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி அடைகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து செல் கின்றனர். அவர்கள் வசதிக்காக ராமேஸ் வரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு அரசு பஸ்சுகள் இயக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் இரவு 10 மணிக்கு மேல் கோயிலுக்கு பஸ் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பக்தர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்ல வேண்டி இருந்தது. இதையடுத்து இரவு நேரங்களில் ராமேஸ்வரம் வரும் அனைத்து பஸ்களும் கோயில் வாசல் வரை சென்று வர வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

சமீபகாலமாக அந்த உத்தரவை பஸ் டிரைவர்கள் கடைபிடிக்கவில்லை. இரவு நேர பஸ்கள் இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். அவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்கின்றனர். ஆட்டோ கட்டணம் கொடுக்க முடியாதவர்கள் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு சமூக விரோதிகள் தொல்லையும் உள்ளது. இதனால் கோயில் வரை மீண்டும் இரவு நேர பஸ்களை இயக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் கூறியதாவது: தங்கும் விடுதிகள் அனைத்தும் கோயிலை சுற்றியே உள்ளன. இதனால் இரவு நேரங்களில் ராமேஸ்வரம் வந்தால் கோயில் பகுதிக்கு செல்ல வேண்டி யுள்ளது. ஆட்டோவில் சென்றால் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர். நடந்து சென்றால் சமூகவிரோதிகள் தொல்லை உள்ளது. எனவே மீண்டும் இரவு நேரங்களில் பஸ்களை இயக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !