உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் அக்.17ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அக்.16ல் லட்சார்ச்சனையுடன் திருக்கல்யாண வைபவம் துவங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு திருமஞ்சனத்திற்கு பின்னர் காலை 7.30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, இரவு 7 மணி வரை நடைபெறும். லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்புபவர்கள் கோயிலில் முன் பதிவு செய்யலாம். அக்.17ல் காலை 8 மணிக்குசுதர்சன ஹோமம்,தொடர்ந்து திருமஞ்சனம், திருவாரிர தரிசனம் நடைபெறும். மாலை 5 மணிக்கு சீர்வரிசை எடுத்துச் செல்லுதல், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !