உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவுடையம்மன் கோவிலில் குடிநீரின்றி பக்தர்கள் தவிப்பு!

வடிவுடையம்மன் கோவிலில் குடிநீரின்றி பக்தர்கள் தவிப்பு!

திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், குடிப்பதற்கு குடிநீர் வசதி இருந்தும் பயன்பாடில்லாததால், பக்தர்கள் கடும்   அவதிப்படுகின்றனர்.  திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலம். சென்னை மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில்   இருந்தும், பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் கை, கால் சுத்தம் செய்ய, கோவிலின் வெளியே நான்கு குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளன.   அவற்றில், மூன்று குழாய்களுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளது. ஒரே ஒரு குழாய் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால், பக்தர்கள் கடும் சி  ரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.  குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவியுடன், அரசியல் பிரமுகர் ஒருவர் கோவிலுக்கு நன்கொடையாக,   குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்தார். சில மாதங்களே பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது, 6 மாதங்களாக, குடிநீர் இயந்திரம் பழுதாகி உள்ளது.   இதனால், பக்தர்கள்  குடிக்க தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.  தற்போது, கோவிலில் ஒரு தொட்டியில், நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் நிர  ப்பப்படுகிறது. ஒரே ஒரு குழாய் மூலம் குடிநீர்  வழங்கப்படுகிறது. ஓரிருநாட்களில் குடிநீர் காலியாகி விடுகிறது. அதன்பின், குழாயில் காற்று தான்   வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !