முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3645 days ago
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. நவராத்திரி விழா அக்.13ல் மாலை 4.35 மணிக்கு 108 சங்காபிஷேக பூஜையுடன் துவங்கியது. தினமும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை செய்து அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், தாயமங்கலம் மற்றும் ”ற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.