உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி லட்சதீபம்!

பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி லட்சதீபம்!

கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரியையொட்டி பக்தர்கள் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். கடலூர் பாடலீஸ்வரர் கோவில்  நவராத்திரி உற்வசம் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தினம் ஒரு அலங்காரத்தில்  மகாதீபாராதனை நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் 6ம் நாளான நேற்று மாலை லட்சதீப விழா நடந்தது.  அதனையொட்டி மாலை 5:00  மணிக்கு பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து சுவாமிகளுக்கு தங்க கவசம் அணிவித்து  தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 6:01 மணிக்கு கோவில் சன்னதி, உட்பிரகாரம், அம்மன் சன்னதி, பிடாரி சன்னதி, அலங்கார  மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு லட்சம் தீபங்களை பக்தர்கள் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !