படவேட்டம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்
ADDED :3645 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஐயப்பா நகர், படவேட்டம்மன் கோவிலில், நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் வெள்ளிகிழமை சாந்தசொரூபினி அலங்காரமும் ஊஞ்சல் சேவையும் நடைபெற இருக்கிறது.காஞ்சிபுரம், ஐயப்பா நகரில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது, ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். அதன்படி, இந்த ஆண்டு 37வது நவராத்திரி விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாள் தங்க கவச அலங்காரத்தை தொடர்ந்து, சந்தனமாரி, பெரியபாளையத்தம்மன், குருமூர்த்தியும் சுயம்பு லிங்கமும், முப்பெரும் சக்திகள், புற்று மாரியம்மன், பிள்ளைகளை காத்தருளும் பேரரசி, பெரியாயி, முத்து, மழைமாரி, விஸ்வரூப தரிசனம், சாந்த சொரூபினி, ஆகிய அலங்காரம் நடைபெறுகிறது.வரும் வெள்ளிகிழமை இரவு ஊஞ்சல் சேவையுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.