குலம் என்பது பிறப்பினால் உண்டாகிறதா?
ADDED :4039 days ago
குலம் என்பது உயிருக்கு இல்லை. உடம்புக்கு இல்லை. செய்தொழிலாலும், குணங்களாலும் தான் வேற்றுமை உண்டாகிறது. ஒருவனே பலப்பல குலத்தை அடைகின்றான். தணிந்த சிந்தனையுள்ள போது அந்தணனாகவும், பொறிபுலன்களை வென்று அடக்கியாளும் போது அரசனாகவும், புண்ணிய பாவ விரக்தியைச் செய்யும்போது வைசியனாகவும், பிறருக்கு உபகாரம் புரியும்போது வேளாளனாகவும், கோபப்படும்போது சண்டாளனாகவும் மாறுகின்றான். எனவே குலம் என்பது குணத்தினால் உண்டாகிறதே தவிர பிறப்பால் இல்லை.