அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் என்றால் என்ன?
ADDED :4039 days ago
அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் என்ற ஒருவகை கும்பாபிஷேகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் நடைபெறுவதுண்டு. இதில் அஷ்டபந்தனம் என்றால் எட்டு மருந்துகளின் சேர்க்கை என்று பொருள் ஆகும். இந்த மருந்துகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் குறிப்பிட்ட மந்திரங்களைக் கூறி ஒன்றாகச் சேர்ப்பார்கள். அதில் வெள்ளை மெழுகு, எருமை எண்ணை, ஜாதி லிங்கம், கொம்பரக்கு செம்பஞ்சு, குங்கிலியம், சுக்கான் பொடி, கல்காவிப்பொடி போன்றவற்றை ஒன்றாகக் கலந்திருப்பார்கள்.