வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா பரத நாட்டியம்!
ADDED :3648 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, பரதநாட்டியம் நடந்தது. விழாவையெ õட்டி நேற்று முன்தினம், மூலவர் பிரகன்நாயகி அம்பிகைக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் சிவானந்தவள்ளி, அம்பிகை சிவனை பூஜை செய்யும் மாவடி சேவை அலங்காரத்தில், கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். திருவண்ணாமலை ஸ்ரீ கலாரத்னா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து லலிதா சகசர நாமார்ச்சனை, சோட சோபவுபசார தீபாராதனை நடந்தது.