ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலச ஊர்வலம்
ADDED :3723 days ago
சேத்தூர்: சேத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் 30 வது ஆண்டு விழா நடந்தது. சக்தி போஸ் கொடியேற்றி துவக்கி வைத்தார். கலசவிளக்குகளை மாவட்ட வேள்ளி குழு இணை செயலாளர் ராமசாமி துவக்கி வைத்தார்.ஆன்மிக ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சத்தியசீலன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திற்கு பின் பக்தர்கள் அக்னிச்சட்டி, கஞ்சி கலசம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதை பழனிச்சாமி துவக்கி வைத்தார்.