வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா
ADDED :3724 days ago
காரைக்குடி: வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவில், சிக்கல் குருசரண் ஆரபி சங்கராபரணம் ராக ஆலாபனை, குன்னக்குடி பால முரளி ஹேமவதி ராக ஆலாபனை இசை நிகழ்ச்சி நடந்தது. அம்பிகா பிரசாத் வயலின், முஷ்ணம் ராஜாராவ் மிருதங்கம் வாசித்தார். ஏற்பாடுகளை சுப துரைராஜ், அய்க்கண் செய்திருந்தனர்.
* ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழந்தைகள் பல்வேறு வடிவங்களில் கொலுவாக வீற்றிருந்தனர். முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாணவி திவ்யா வரவேற்றார். தமிழ்துறை தலைவர் மெய்யாண்டவர் பேசினார். மாணவி காவியா நன்றி கூறினார்.