கைலாசநாதர் கோவிலில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம்!
ADDED :3721 days ago
காரைக்கால்: கைலாசநாதர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு, மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சரஸ்வதி தேவி அருள் பாலித்தார். காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி 7ம் நாள் விழாவில் சுந்தராம்பாளுக்கு பலவகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சரஸ்வதி தேவி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.நேரு நகர் ஆனந்த விநாயகர் கோவிலில் விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.