உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு

அண்ணாமலையார் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும், ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இந்த நாட்களில், உற்சவ மூர்த்தி பராசக்தி அம்மன் கொலுமண்டபத்தில் எழுந்தருளி, பல்வேறு ரூபங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா, 9ம் நாளான நேற்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மூலவரான உண்ணாமுலையம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !