அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக பணியில் கல்தச்சு மண்டபம், இயற்கை கலவை மூலம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த, 2002ம் ஆண்டு நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஜனவரி, 26ம் தேதி, பாலாலய பூஜை நடத்தப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. புதுப்பிக்கும் பணியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல், இயற்கை கலவை மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோவில் உள் பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் அருகில் உள்ள கல்தச்சு மண்டபம் பழமை மாறால் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் கோபுரங்கள் புதுப்பிக்கும் பணிகளில் சிமென்ட் பூச்சுக்கு பதிலாக சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம், மணல், ஆகியவற்றை அரைத்து பதப்படுத்தி அந்த கலவை மூலமாக பூச்சு வேலை நடந்து வருகிறது.மேலும், கோவில் காம்பவுண்டுகளில் ஏற்கனவே இருந்த சிமென்ட் இணைப்பு பூச்சுகள் அகற்றப்பட்டு, இயற்கை கலவை மூலம் பூச்சு பணி நடக்கிறது.