கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :3643 days ago
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும், 26ம் தேதி மாலை, 5 மணிக்கு, அன்னாபிஷேகம் நடக்கிறது. இதில், பசுபதீஸ்வர், நாகேஸ்வரர், கரியமாலீசுவர் ஆகியோர் திருமேணி முழுவதும் அன்னம் சாற்றி அன்னாபிஷேகம் நடக்கும். அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் நன்கொடை, அபிஷேக பொருட்கள், அரிசி, பருப்பு, தானிய வகைகள், காய்கறிகளை கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என, அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.