உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசேகரபட்டிணம் தசரா விழா இன்று இரவு மகிஷாசூரன் வதம்

குலசேகரபட்டிணம் தசரா விழா இன்று இரவு மகிஷாசூரன் வதம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், இன்று இரவு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவிற்கு அடுத்தபடியாக இந்த கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, அம்மன், காளி உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கோயிலுக்கு வருவார்கள். விழா முத்தாரம்மன் கோயிலில் அக்., 13ல் காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின்பு விரதமிருந்தவர்கள் வேடம் அணிந்து பக்தர்களிடம் காணிக்கை வசூல் செய்தனர். பின் கோயிலுக்கு சென்று காணிக்கைகளை செலுத்தி அம்மனை வணங்கி சென்றனர்.

அம்மன் திருவீதியுலா: விழா நாட்களில் தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங் களில் திருவீதி உலா வந்தார்.மகிஷாசூர வதம்: இன்று இரவு 11 மணிக்கு அம்மன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின் அலங்காரத்துடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் இரவு 12 மணிக்கு எழுந்தருளுவார். அங்கு மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அக்., 24 மாலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை கமிஷனர் பச்சையப்பன், உதவி கமிஷனர் அன்னக்கொடி. நிர்வாக அதிகாரி கணேசன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !