உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டல மகரவிளக்கு சீசனுக்கு 500 புதிய பஸ்கள்

மண்டல மகரவிளக்கு சீசனுக்கு 500 புதிய பஸ்கள்

சபரிமலை: சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசனுக்காக 500 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றிற்கு பாடி கட்டும் பணி, பல்வேறு டிப்போக்களில் நடக்கிறது. சபரிமலையில் மண்டல காலம் வரும் நவ.,16-ம் தேதி தொடங்குகிறது.பக்தர்களுக்கு வசதிகள் செய்யும் பணி நடக்கிறது. கேரள போலீசின் ஆன்லைன் முன்பதிவும் தொடங்கி விட்டது.கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பம்பைக்கு பஸ் இயக்க தயாராகி வருகிறது.இந்த ஆண்டு 500 புதிய பஸ்கள் வருகின்றன. இதற்காக பாப்பனங்கோடு, மாவேலிக்கரை, ஆலுவா, எடப்போழ், கோழிக்கோடு டிப்போக்களில் பாடி கட்டும் பணி நடக்கிறது. 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செங்கன்னுார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து தாழ்தள சொகுசு பஸ் பம்பைக்கு இயக்கப்பட்டது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் பக்தர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் தாழ்தள சொகுசு பஸ் அதிக அளவில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஐகோர்ட் உத்தரவு:சபரிமலைக்கு செல்லும் அனைத்து ரோடுகளையும் நவம்பர் முதல் வாரத்தில் சீரமைத்து முடித்து விட வேண்டும் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது கேரளாவில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி பணிகளை தாமதம் செய்து விடக்கூடாது என்று, ஐகோர்ட்டில் சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனுசிவராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !