ஆயுதபூஜை விழா கோலாகலம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். மருத்துவமனை வளாகத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது. டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
* அதேபோல், நாமக்கல் நகரில் உள்ள லாரி பட்டறைகள், போலீஸ் ஸ்டேசன், வர்த்தக நிறுவனங்கள், தனியார் துறை அலுவலகம் உள்பட பல்வேறு பகுதிகளில், கடைகளில் வர்ணம் அடிக்கப்பட்டு, வாழை மரம், மா இலை தோரணம் மற்றும் ஜண்டா காகிதம் கட்டி அழகுப்படுத்தப்பட்டு, ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும், தொழில் நிறுவனங்கள் முதல், சிறிய கடைகள் வரை, ஆயுதபூஜை விழா கோலாகலமாக நடந்தது.