சாயிபாபா சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3640 days ago
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி இன்ஜினியரிங் கல்லுாரி எதிரில் உள்ள, சீரடி சாயிபாபா மகா சமாதி தினம் மற்றும் 97ம் ஆண்டு ஆராதனை நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கி, 9 மணிக்கு 85 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் செய்த சீரடி சாயிபாபா சிலைக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலுார் சாயி பஜன்ஸின் நந்தகுமார் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. 11.30 மணிக்கு சீரடி சாயிபாபா பல்லக்கு உற்சவம் நடந்தது. மதியம் 12 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. மாலை 2.15 மணிக்கு பக்தர்களால் எழுதிய சீரடி சாயிபாபா நாமாவளிகள் பூமிக்கு அர்ப்பணம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது. இது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 6 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம், தர்மாபுரி ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.