உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா தபோவனத்தில் நவசண்டி ஹோமம்!

ஞானானந்தா தபோவனத்தில் நவசண்டி ஹோமம்!

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்தா தபோவனத்தில், நவராத்திரி விழாவில் நவசண்டி ஹோமம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. தினந்தோறும் அதிகாலை 5:30 மணிக்கு, சக்ர நவாவ ரண பூஜை,  சுவாசினி பூஜை, நவராத்திரி மண்ட பத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை, ஞானானம்பிக்கைக்கு சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மதியம் 1:15 மணிக்கு, நவசண்டி ஹோமம் நடந்தது.  விஜயதசமியை முன்னிட்டு, தம்பதி பூஜையு டன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை, மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நேற்று நடந்தது. விழா ஏற்பாடுகளை, தபோவன நிர்வாகி கி ருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !