உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுராவில் துர்கா பூஜை: முஸ்லிம்கள் கொண்டாட்டம்!

திரிபுராவில் துர்கா பூஜை: முஸ்லிம்கள் கொண்டாட்டம்!

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், துர்கா பூஜை விழாவில், முஸ்லிம்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.இங்குள்ள ஒரு கிராமத்தில், முஸ்லிம்கள் அதிகள வில் வசிக்கின்றனர். துர்கா பூஜா விழா கமிட்டியின் தலைவராக இருப்பதும் முஸ்லிம் நபர் தான். பசுருதீன் புயான் என்ற அந்த நபர் கூறியதாவது:சிறு வயதிலிருந்தே, துர்கா பூஜையில் ஆர்வத்துடன் பங்கேற்பேன். இதை, இந்து விழாவாக, ஒருபோதும் கருதவில்லை. இந்த நாட்களில், நாங்கள் ஒன்றாக விழாவை கொண்டாடுகிறோம். அதனால் தான், இந்துக்கள், பெரும்பான்மையாக இருந்தும், மூன்று ஆண்டுகளாக, துர்கா பூஜை கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.இந்த மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மாணிக் சர்க்கார் முதல்வராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !