உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: அதிகாரிகள் ஆய்வு

சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: அதிகாரிகள் ஆய்வு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, ஹிந்து அறநிலைத்துறை கமிஷனர் தலைமையிலான குழு, ஆய்வு நடத்தியது. சேலம் செரிரோட்டில், சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே, கும்பாபிஷேக பணிக்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கிவிட்டது. இந்நிலையில், நேற்று இந்து சமய அறநிலைதுறை கமிஷனர் வீரசண்முகமணி, சேலம் இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் சபர்மதி, கோவில் உதவி கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் ஸ்தபதி கவுதமன் உள்ளிட்ட பலர் அடங்கிய குழுவினர், சுகவனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வது குறித்தும், புதுப்பிக்க வேண்டிய பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !