வனதுர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3637 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வனதுர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் மகா கணபதி, வனதுர்க்கையம்மன் , அங்காள பரமேஸ்வரி கோவில்கள் புதியதாக கட்டப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா நாளை(25ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 10:35 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை முடிந்து, மயிலம் பொம்மபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசாமிகள் தலைமையில் கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது . முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள், கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் .