உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கோயில்களில் அம்பு போடும் விழா

தேவகோட்டை கோயில்களில் அம்பு போடும் விழா

தேவகோட்டை,: தேவகோட்டை கோயில்களில் நவராத்திரியை முன்னிட்டு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். நகர மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில், கைலாசநாதர் கோயில், மும்முடிநாதர் கோயில், கோதண்டராமர் கோயில், ரங்கநாதர் பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கம்,மற்றும் வண்ண குதிரை வாகனங்களில் சிவன்கோயில் கிழக்குபகுதி மைதானத்தில் நேற்று இரவு எழுந்தருளினர். இதனை தொடர்ந்து நாலாபக்கமும் அம்புகள் எய்யப்பட்டன. பக்தர்களிடையே அம்புகள் எடுப்பதில் போட்டி நிலவியது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !