காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
ADDED :3694 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது. நவராத்திரி மற்றும் விஜயதசமி விழாக்கள் நிறைவு பெற்றதை அடுத்து, அரங்கநாதர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். லோகநாயகி தாயார் உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிவுலா வந்தார். இரு சுவாமிகளையும் பரிவேட்டை மைதானத்தில் நிறுத்தி வைத்தனர். அதன் பின், வன்னிமரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.