உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பாதூர் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

உளுந்தூர்பேட்டை: பாதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா,  பாதூரில்  அமைந்துள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.  இதையொட்டி நேற்று முன்தினம்  மாலை அங்குரார்பணம், வேதப்ரபந்தம், வாஸ்துசாந்தி, அக்னி பிரதிஷ்டை, மகா சாந்தி, திருமஞ்சனம், ஹோமம் நடந்தது. நேற்று விஸ்வரூபம்,  புண்யாகவாசனம்,  கும்பாராதனம், நித்யஹோமம், யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து காலை 6:30 மணிக்கு கடம் புறப்பாடும், 6: 50 மணிக்கு ÷ காபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமும் நடந்தது. ஊராட்சி துணை தலைவர் ராமலிங்கம், நீர் பாசன சங்க  தலைவர் சம்பத்ஐயர்,  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன்அய்யங்கார், முன்னாள் ஊராட்சி  தலைவர்கள் மணி அய்யங்கார், ராமசாமி, வாசு, முன்னாள் துணை தலைவர்கள் கருணாநிதி, ராதா, கோவில் பரம்பரை அறங்காவலர் அரங்கநாதன்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !