அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3640 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பெண்ணாடம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை நடந்தது. ÷ நற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, மூன்றாம் கால பூஜை, இரவு விநாயகர், அங்காளம்மன், பெரிய நாயகி சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, 8:30 மணியளவில் விநாயகர், அங்காளம்மன், பெரியநாயகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய் தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.