உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவிலை சீரமைக்க தன்னார்வலர்கள் களப்பணி

சிவன் கோவிலை சீரமைக்க தன்னார்வலர்கள் களப்பணி

ஆர்.கே.பேட்டை:புதர் மண்டி கிடந்த சந்திரேஸ்வரர் கோவிலை சீரமைக்க, சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், நேற்று, களப்பணி மேற்கொண்டனர். உடன், உள்ளூரைச் சேர்ந்த கிராமவாசிகளும் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் ஏரிக்கரையில் உள்ளது, சந்திரேஸ்வரர் கோவில். புதர் மண்டி, சீரழிந்து கிடந்த இக்கோவிலின் நிலை குறித்து நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் சிவபக்தர்கள், கோவிலை சீரமைக்க முன்வந்தனர். இதில், கோவிலில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து, சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், கோவில் ஸ்தபதி மற்றும் கட்டட பொறியாளர்கள் குழு, சந்திரேஸ்வரர் கோவிலில் நேற்று களப்பணி மேற்கொண்டது.உடன், உள்ளூரைச் சேர்ந்த பகுதி வாசிகளும் கலந்து கொண்டனர். அடுத்தகட்டமாக, மண்ணில் புதைந்துள்ள கல் துாண்கள் மற்றும் பாறைகளை சேகரிப்பது என, முடிவெடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !