உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கள்ளக்குறிச்சி: புத்தந்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்தூர்  கிராமத்தில் உள்ள நுõற்றாண்டு பழமையான புத்துமாரியம்மன் கோவில் பக்தர்கள் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் கெ ங்கையம்மன், அய்யனார், கருப்பனார், கன்னிமார் சன்னதிகளும் அமைத்து திருப்பணி வேலைகள் முடிந்தது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, ÷ நற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், ரக்ஷபந்தனம், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று  காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பட்டு, கோவிலை வலம் வந்தது. பின், கோவில் விமான கலசத்தில்  புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் செய்து, மகா  தீபாராதனை நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள் விழாவில் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !