அவிநாசியில் கஞ்சி கலய ஊர்வலம்
அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சி கலய விழா நேற்று நடைபெற்றது. பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்துக்கு, மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவி சரஸ்வதி சதாசிவம் தலைமை வகித்தார். பிளேக் மாரியம்மன் கோவில் தலைவர் அவிநாசியப்பன், கவுன்சிலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகி சிவானந்தன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வி.எஸ்.வி., காலனி, காமராஜ் வீதி, சேவூர் ரோடு வழியாக சென்ற ஊர்வலம், மன்றத்தை அடைந்தது. கஞ்சி கலயம் சுமந்து வந்த பெண்கள், ஆதிபராசக்தி அம்மன் திருவடிக்கு பாலாபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி வழிபாட்டு பாதுகா மன்ற நிர்வாகி மஹாதேவன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.