திருநள்ளார் நளன் சீரடி சாய்பாபா கோவிலில் கலச அபிஷேகம்
ADDED :3640 days ago
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் நளன் சீரடி சாய்பாபா கோவிலில் ராஜகோபுர கலச அபிஷேக விழா நேற்று நடந்தது. திருநள்ளார் நளன் குளம் அருகில் சீரடி சாய்பாபா கோவில் கோபுரத்திற்கு கலசாபிஷேகம் நடந்தது. ஸ்ரீநளன் சீரடி சாய்பாபா மூலஸ்தானத்திற்கு சிறப்பு ஹோமம் கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று காலை கோபுர கலச அபிஷேகம், மூலவர் அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீநளன் சீரடி சாய்பாபா ஆலயம் சிறப்பாக செய்திருந்தனர்.