உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணுவர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வாணுவர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வாணுவர் தெருவில் நேற்று நடந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர். பரங்கிப்பேட்டை வாணுவர் தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 23ம் தேதி தேவதா  அனுக்ஞை, விநாயகர் பூஜை, யஜமானர் சங்கல்பம், கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி,  பூர்வாங்க பூஜை, ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலை ப்ரவேசம், முதல் கால யாக  பூஜை மஹ பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 24ம் தேதி இரண்டாம் மற்றும்  மூன்றாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந் தது.  நேற்று நான்காம் கால யாக பூஜை, மகா தீபாராதனை, கடம் புறப்பாடாகி காலை 10:01 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில்  பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !