திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் கொடிமரம் ஸ்தாபித விழா!
ADDED :3652 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் காளஹஸ்தீரர், ஞானாம்பிகை, பத்மகரீஸ்வரர், அபிராமியம்மன் கோயில் கொடிமரம் ஸ்தாபித விழா நேற்று நடந்தது. மின்துறை அமைச்சர் விஸ்வநாதன், மேயர் மருதராஜ், திருப்பணிக்குழுத் தலைவர் வேலுச்சாமி மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.