கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் உலா
ADDED :3707 days ago
ஊத்துக்கோட்டை: பக்தர்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட கருட வாகனத்தில், வரதராஜ பெருமாள், கோவிலை வலம் வந்தார்.ஊத்துக்கோட்டை சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் பங்களிப்புடன் கருட வாகனம் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, அந்த வாகனத்தில், உற்சவர், சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி, கோவிலை மூன்று முறை வலம் வந்தார். உற்சவருக்கு முன், பஜனை குழுவினர் பாடல்கள் பாடி கொண்டு சென்றனர். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.