பொள்ளாச்சி கோவில்களில் கும்பாபிேஷகம் கோலாகலம்
 பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் செடி முத்துார் பகுதியில் உள்ள கோவில்களில், கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி., காலனி 1 பாரதி வீதி மங்கள விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சக்தி திருமண மண்டபத்திலிருந்து தீர்த்தம், முளைப்பாரி அழைத்தல்; மாலை, 5:30 மணிக்கு கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பழ நைவேத்திய நவதானியங்களை கொண்டு வேள்விகள் ஆரம்பம், காலை, 9:05 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. பின், காலை, 9:15 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் விமான கும்பாபிேஷகம், மூலாலயம் மகா கும்பாபிேஷகம்; காலை, 10:00 மணிக்கு அன்னதானம் ஆரம்பம், காலை, 10:15 மணிக்கு மகா அபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செடிமுத்துார்: பொள்ளாச்சி செடிமுத்துார் முத்து விநாயகர், முத்து மாகாளி அம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் முத்து வரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக விழாவையொட்டி, 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 7:30 மணிக்கு 108 வகையான மூலிகை பொருட்கள் ஆகுதி அருள்நிலை ஏற்றல், காலை, 8:00 மணிக்கு திருக்குடங்கள் திரு உலா, காலை, 8:30 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிேஷகம், காலை, 9:30 மணிக்கு பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை, காலை, 10:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மண்டல பூஜைகள் நடக்கிறது.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டி புத்துாரம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்களில் நேற்று நடந்த கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு அருகே, கொண்டம்பட்டி புத்துாரம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கும்பாபிேஷக விழா, கடந்த 24ம் தேதி காலையில், மங்கள இசை, குரு பிரார்த்தனை, கோபூஜை, கங்கா பூஜையும், மாலையில் அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, ராக்சோகன ஹோமமும், 25ம் தேதி கணபதி பூஜை, நவகிரக, சண்டிகா, ஹோமமும் நடந்தன. நேற்று காலை, 4:30 முதல் 6:00 வரை நாடி சந்தானம், யாத்ரா தானம், யாக சாலையிலிருந்து கலசங்கள் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின், காலை, 7:00 முதல் 8:00 மணிக்குள் புத்துாரம்மனுக்கு தென்சேரிமலை, திருநாவுக்கரசு மடம், முத்துசிவராமசாமி, பேரூர் மேல்மடம் ஞானசிவாச்சாரியார் ஆகியோர் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனை கோவில் வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் நின்ற ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர். பொதுமக்கள் மீது கலச தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், மக்கள் செய்தனர்.