நெல்லிக்குப்பம் நடன பாதேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்!
ADDED :3715 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நடன பாதேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. மனிதனின் பசியைப் போக்க உணவளிக்கும் சிவ பெருமானைக் குளிர்விக்க ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கமாகும். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்த தாளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. நடன பாதேஸ்வரரை அன்னத்தால் அலங்கரித்து அன்னாபிஷேகம் செய்தனர். பூஜைகள் முடிந்தவுடன் சிவன் மேல் இருந்த அன்னத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். செயல் அலுவலர் நாகராஜன், கணக்கர் சரவணன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.